Tomato Thokku
தக்காளி தொக்கு
தேவையான பொருட்கள்
1.தக்காளி – 1/4 கிலோ (நறுக்கியது)
2.புளி தண்ணீர் – 1/2 கப்
3.மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
4.மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
5.கடுகு – 1/2 டீஸ்பூன்
6.வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
7.பெருங்காயம் – 1 /4 டீஸ்பூன்
8.நல்லெண்ணெய் – தேவையான அளவு
9.உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1.நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து,மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
3.பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும்.
4. தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.
Tomato thokku
Ingredients
Tomatoes – 1/4 kg (chopped)
Tamarind water – 1/2 cup( lemon size )
Chilli – 1 tbsp
Turmeric – 1/4 tbsp
Mustard – 1/2 tbsp
Hing- 1/2 tbsp
Ginger – 1/4 tbsp
PRESSO cold pressed black Sesame oil – required quantity
Salt – required quantity
Procedure:
1. Grind the chopped tomatoes into a fine saucepan. Roast the hing in a skillet and mix in the mixer grinder.
2. Heat 100% safe and natural PRESSO cold pressed oil in a pan and heat it with mustard, cayenne pepper, fennel powder and saute.
3. Then add the grilled tomato paste and saute well. Place the oven on a moderate fire and boil until the tomato paste is half done.
4. Reduce the tomato paste by half, then add turmeric, chilli powder, Tamarind water and salt to taste.Keep it in simmer and wait till the oil separates ,Then keep it aside. Now you can feel you home the aroma of the PRESSO cold pressed oil urging clinge your taste buds.