Pearl Millet Curd Rice (கம்பு தயிர்சாதம்)
கம்பு தயிர்சாதம்
தேவையான பொருட்கள் :
1.கம்பு – 1 கப்
2.சின்ன வெங்காயம் – 5
3.ப.மிளகாய் – 1
4.தயிர் – தேவையான அளவு
5.உப்பு – தேவையான அளவு
தாளிக்க வேண்டியவை :
1.நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
2.கடுகு – 1/4 டீஸ்பூன்
3.காய்ந்த மிளகாய் – 1
4.பெருங்காய துள் – சிறிது
5.கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பை கழுவி விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். (நேரம் கூட ஊறினால் பரவாயில்லை).
தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
அரைத்த கம்புடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து + ப.மிளகாய் + வெங்காயம் சேர்த்து பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
சூடு ஆறிய பின் தயிர் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து தயிர் சாதத்தில் கலந்து பரிமாறவும்.
சுவையான சத்தான கம்பு தயிர் சாதம் ரெடி.
Pearl millet curd rice
required things :
1. Pearl millet – 1 cup
2.Small onion – 5
3. Green Chili – 1
4. Curd- as needed
5.Salt – as needed
To season:
1. 100% Natural,pure and safest Presso cold pressed Gingelly oil – 2 tbsp
2. Mustard – 1/4 tsp
3. Red chillies – 1
4. Hing – a pinch
5. Curry leaves – a little
Recipe:
Chop the onions and chillis.
Wash the pearl millets and let it soak for 15 to 20 minutes. (It’s okay if it takes time to soak).
Drain the water and grind in the coarse powder.
Add 1 1/2 cup water + green chilli + onion to the minced rye and bring to a boil.
After heating, add yogurt + salt and mix.
Put the frying pan in the oven, pour the Presso cold pressed oil and when it is hot, add the seasonings and serve with the curd mixture.
Delicious,nutritious pearl millet curd rice. Ready!